சின்ன ஊறணியில் வெற்றிகரமாக நடைபெற்ற சமூக மருத்துவ சேவை
04.07.2026 அன்று MST Health Care நிறுவனத்தின் ஏற்பாட்டில் சின்ன ஊறணி பகுதியில் சமூக மருத்துவ சேவை மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீடு தேடி மருத்துவ சேவை, முதியோருக்கான உடல்நல மதிப்பீடு, அடிப்படை சுகாதார பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், சுகாதார விழிப்புணர்வு மற்றும் தனிப்பட்ட உடல்நல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மருத்துவக் குழுவினர் மற்றும் தாதியர் பயிற்சி மாணவர்கள் பொதுமக்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் உடல்நலத் தேவைகளை அறிந்து தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த சின்ன ஊறணி மக்களுக்கும், மருத்துவர்கள், தாதியர் குழு, தன்னார்வலர்கள் மற்றும் அனைவருக்கும் MST Health Care தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
"சமூகத்தின் ஒவ்வொரு இல்லத்திற்கும் தரமான, அன்பான மற்றும் அணுகக்கூடிய சுகாதார சேவையை கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம்."
MST Health Care